அமெரிக்க ஓபன் டெனிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் 19 வயதே ஆன கோகோ காஃப் இறுதிப் போட்டியில் வென்று கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றுள்ளார்.19 வயதான கோகோ காஃப் அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டிக்கு நுழைந்த போதே பரபரப்பு ஆரம்பமானது.
ஆனாலும், தரவரிசையில் முதல் இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் அரினா சபலென்காவை காஃப் வீழ்த்துவது கடினம் என்றே பலரும் எண்ணினர்.எனினும் அந்த எண்ணத்தை தகர்த்து கோகோ காஃப் 2 – 6, 6 – 3, 6 – 2 என்ற செட் கணக்கில் அரினாவை வீழ்த்தி அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
இதற்கு முன், 1999ஆம் ஆண்டு, தன் 18 வயதில் செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று சாதனை புரிந்து இருந்தார்.
அப்போது அவர் புகழ் பெற்ற மார்ட்டினா ஹிங்கிஸ்-ஐ வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை செய்து இருந்தார்.அவருக்கு அடுத்து தற்போது 19 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மகளிர் வீராங்கனை கோகோ காஃப்தான்.இந்தப் போட்டியில் கடைசி வெற்றிப் புள்ளியை பெற்றவுடன் கீழே விழுந்து தன் வெற்றியை நம்ப முடியாமல் ஆனந்தக் கண்ணீரில் நனைந்தார்.