deepamnews
இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் நேற்றிரவு (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இன்று(14) நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ள குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ReplyForward

Related posts

அச்சுவேலி போராட்டம் முடிவு – ஆளுநர் அலுவலக உத்தியோகத்தர்கள் சந்திப்பு

videodeepam

வறுமையில் சிக்குண்டுள்ள இலங்கையர்கள் சொத்துக்களை விற்கின்றனர் – உலக உணவுத்திட்டம் அறிவிப்பு

videodeepam

நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை: ஜனாதிபதி அறிவிப்பு

videodeepam