deepamnews
இலங்கை

யாழ்ப்பாணத்தில் பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை உயிரிழப்பு!

பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் உயிரிழந்துள்ளது. கிருஷ்ணகுமார் கரிஹரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

குறித்த குழந்தையின் தாய் இன்று காலை குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். இதன்போது குழந்தை அசைவற்று காணப்பட்டது.

இந்நிலையில் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். பால் புரையேறியே குழந்தை இறந்ததாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

Related posts

கிளிநொச்சி மாவட்ட பெரும்போகத்திற்கான உர விநியோகம் தொடர்பான கலந்துரையாடல்!

videodeepam

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத் தடை – நீதிமன்றம் உத்தரவு

videodeepam

மீண்டும் குறைவடையும் எரிவாயு விலை…

videodeepam