deepamnews
இலங்கை

மூடிய அறைகளில் அநாகரீக செயல் – பொலிஸாரிடம் சிக்கிய 24 இளம் ஜோடிகள்.

கொழும்பு – ஹோமாகம நகரில் இயங்கும் தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான பூங்கா ஒன்றில் சிறிய மூடிய அறைகளில் அநாகரீகமாக நடந்து கொண்ட 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர்களை இலக்கு வைத்து இவ்வாறான முறைக்கேடான சம்பவங்கள் இடம்பெறுவதாக ஹோமாகம பொலிஸாருக்கு முறைப்பாடொன்று கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் நேற்று  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 18 வயதிற்கு உட்பட்ட 24 ஜோடிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பூங்காவிற்குச் செல்லும் போது மூடப்பட்ட சிறிய அறைகளில் பாடசாலை வயதுடைய சிறுவர்கள் அநாகரீகமாக நடந்து கொள்வதாக அப்பகுதியின் பெற்றோர்கள் மற்றும் மதத் தலைவர்கள் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட, அனைத்து சிறுவர்களையும் அழைத்து, உண்மைகளை விளக்கி, அறிவுறுத்தல்களை வழங்கிய பொலிஸார், சிறுவர்களின் பாதுகாவலர்களுடன் தொடர்பை மேற்கொண்டு அவர்களை விடுத்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்தில் இருந்த சிறுவர்கள் பலர் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக கூறி குறித்த பகுதிக்கு வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குழந்தைகளின், பெற்றோர்களையும், பாதுகாவகர்களையும் பொலிஸார் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது, பூங்காவின் உரிமையாளர் வந்து பொலிஸ் அதிகாரிகளுடன் காரசாரமாக உரையாடியதாகவும் இதனால் பதற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கபடுகிறத.

Related posts

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

videodeepam

களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பாரிய போராட்டம்.

videodeepam

மின் கட்டண அதிகரிப்பிற்கு அமைய உணவுப் பொருட்கள், உற்பத்தி சேவைகளின் விலைகள் அதிகரிப்பு

videodeepam