நடிகை நயன்தாராவை தெரியாத இந்திய சினிமா ரசிகர்கள் இல்லை என்றே கூறலாம். கேரளாவில் இருந்து வந்தாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்து சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார்.

திரைப்படங்களை தாண்டி நடிகை நயன்தாரா அதிகம் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். 50 வினாடிகள் ஓடும் விளம்பரத்தில் நடிக்க ரூ. 5 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
தனியாக சொந்த தொழில்கள் மூலமாகவும் நயன்தாரா கோடி கோடியாக சம்பாதித்து வருகிறாராம். சென்னையில் சொகுசு வீடு, இதில் பிரத்யேகமான திரையரங்கு, நீச்சல் குளம், ஜிம் போன்ற வசதிகள் உள்ளனவாம்.