“தர்மமுழக்கம்” என்று அழைக்கப்படும் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய அணிக்கும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான துடுப்பாட்ட தொடரின் 6வது தர்மமுழக்கம் சமநிலையில் நிறைவுற்றது.
நேற்றைய தினம் முதல் நாள் ஆட்டத்தில் முழங்காவில் மகா வித்தியாலயம் 65.03 பந்து பரிமாற்றங்களில் 195 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்த நிலையில் இன்று இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த தர்மபுரம்
மத்திய கல்லூரி அணி 34.01பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 142 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்தனர்.
தொடர்ந்து இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த முழங்காவில் மகா வித்தியாலய அணி 33.03 பந்து பரிமாற்றங்களில் 83 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்தனர்.தொடர்ந்து 137 ஓட்டங்களை 13 பந்து பரிமாற்றங்களில் பெற வேண்டும் என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய தர்மபுரம் மத்திய கல்லூரி அணி 13பந்து பரிமாற்றங்களில் 44ஓட்டங்களுக்கு 2இலக்குகளை இழந்த நிலையில் போட்டி நடுவர்களால் சமநிலைக்கு கொண்டுவரப்பட்டது.
குறித்த தொடரில்
ஆட்டநாயகனாக -தர்மபுரம் மத்திய கல்லூரி அணி வீரர் யு-டினோராஜ்
சிறந்த துடுப்பாட்ட வீரராக தர்மபுரம் மத்திய கல்லூரி வீரர் K.றொபின்சன்
சிறந்த களத்தடுப்பாளராக முழங்காவில் மகா வித்தியாலய அணி வீரர் எஸ்-டிசாந்தன்
சகலதுறை வீரராக -முழங்காவில் மகா வித்தியாலய அணி வீரர் வி.யதுசன்
சிறந்த பந்து வீச்சாளராக தர்மபுரம் மத்திய கல்லூரி அணி வீரர் யு-டினோராஜ் தெரிவுசெய்யப்பட்டார்