deepamnews
சர்வதேசம்

இஸ்ரேலில் இருந்து தென்னாப்பிரிக்கா தனது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது.

தென்னாப்பிரிக்கா தனது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது என்பது ஹமாஸுக்கும் ஈரானுக்கும் கிடைத்த வெற்றி” என இஸ்ரேலிய வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஒக்டோபர் 7-ந்திகதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்தது. இசை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் உள்பட எல்லை பகுதியில் தங்கியிருந்தவர்களை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டது.

இந்த சம்பவத்தில், 1100 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அந்த அமைப்பு 241 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றுள்ளது என இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்குமான போரில் அப்பாவி பொதுமக்கள் பலியாவது தொடர்ந்து வரும் நிலையில் தென்னாப்பிரிக்கா, இஸ்ரேலுடனான தனது உறவை முடிவு செய்ய இஸ்ரேலில் இருந்த ஒட்டுமொத்தத் தூதர அதிகாரிகளையும் திரும்ப பெற்றுள்ளது.

தூதர்களைத் திரும்ப பெறுவது வழக்கமான நடவடிக்கைதான். இஸ்ரேலுடனான உறவைத் தொடர்வது என்பது எல்லா விதங்களிலும் சாத்தியமா என்பது குறித்து முடிவு செய்ய அவர்கள் அழைக்கப்பட்டிருப்பதாகத் தென்னாப்பிரிக்காவின் வெளியுறவு அமைச்சர் நலேதி பந்தோர் தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேலின் பதிலளிக்கும் இயல்பு என்பதை கூட்டு தண்டனையாகத் தான் பார்க்க முடிகிறது. முழுமையான போர் நிறுத்தத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என அவர் தெரிவ்த்துள்ளார்.

இந்தநிலையில் “தென்னாப்பிரிக்கா தனது ஒட்டுமொத்த தூதரக அதிகாரிகளையும் திரும்ப பெற்றது என்பது ஹமாஸுக்கும் ஈரானுக்கும் கிடைத்த வெற்றி” என இஸ்ரேலிய வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

உக்ரைனில் குடியிருப்பு மீது ரஷிய ஏவுகணை தாக்குதல்- 11 பேர் பலி

videodeepam

திட்டமிட்டவாறு மே 14 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என துருக்கி அதிபர் அறிவிப்பு

videodeepam

பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் – 57 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

videodeepam