deepamnews
சர்வதேசம்

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்தத்தில் 49 போர் மாயம்.

யேமன் அருகே அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வளைகுடா நாடுகளை நோக்கி 75 பேருடன் சென்றுகொண்டிருந்த படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகமாக வீசிய காற்றில் நிலைகுலைந்து அதிலிருந்தவா்கள் கடலுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் 26 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எஞ்சிய 49 பேரும் காணாமல் போயுள்ளதாக யேமன் கடலோரக் காவல்படையினா் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் , காணாமல் போனவர்கள் யாரும் இதுவரை மீட்கப்படாத நிலையில், விபத்தில் அவா்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Related posts

லிபியா அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணித்த 73 பேர் உயிரிழப்பு

videodeepam

பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து தீப்பிடித்ததில் 41 பேர் பலி – பாகிஸ்தானில் சம்பவம்

videodeepam

சூடானில் வலுக்கும் கலவரம்: பலியானோர் எண்ணிக்கை 200ஆக அதிகரிப்பு

videodeepam