deepamnews
இலங்கை

வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் வெளியான செய்தி.

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க பத்து பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில் இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பொலிஸ் திணைக்களம், மத்திய வங்கி, திறைசேரி, இலங்கை சுங்கம், வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிபுணர் குழுவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

இந்த நிபுணர் குழு சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் காற்று மாசுபாட்டில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் வாகனங்களை இறக்குமதி செய்வதில் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த நிபுணர் குழு இதற்கு முன்னர் நான்கு தடவைகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய இந்த அறிக்கை அடுத்த மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளது.

Related posts

இஸ்ரேலில் மேலுமொரு இலங்கைப் பிரஜை உயிரிழப்பு.

videodeepam

தனிநபர் ஒருவர் யாழ் மாநகரசபைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டம்

videodeepam

551 காலாட்படை படைப்பிரிவால் மாணவர்களுக்கு குடிநீர் திட்டம்.

videodeepam