deepamnews
இலங்கை

முல்லைத்தீவுக்குத் தெற்கே காற்றுச் சுழற்சி – மழை தொடரும் என எச்சரிக்கை !

இலங்கையின் முல்லைத்தீவுக்கு தெற்காகக் காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது என யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை முதுநிலை விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.

தற்போதைய வானிலை மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

வட கிழக்கில் நேற்றுத் தொடக்கம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீரற்ற காலநிலையினால் தொடர்ச்சியாக மழை கிடைக்கப்பெற்று வருகின்றது. இம்மழை இன்னும் சில தினங்களுக்கு தொடர்ச்சியாக இருக்கும் என வானிலை ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் சனிக்கிழமை காலை 7 மணியளவில் இலங்கையின் முல்லைத்தீவுக்கு தெற்காகக் காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது.

இதன் காரணமாக நேற்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹிக்கடுவையில் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் பெண் ஒருவர் கைது

videodeepam

மலையகத் தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் இணைக்க திட்டம் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

videodeepam

சமஷ்டி’ தீர்வே எமக்கு வேண்டும்   – நல்லூர் கிட்டு பூங்காவில் திரண்ட மக்கள்.

videodeepam