கட்சிகளுக்குள் பிளவு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் எவராகவிருந்தாலும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் கூடவுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு அங்கத்துவ கட்சியாக இருந்து எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஒரு புதிய அணுகுமுறையை பரிந்துரை செய்துள்ளது.
அதாவது இந்த தேர்தல் வட்டார அடிப்படையிலும் விகிதாசார அடிப்படையிலும் பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற ஒரு புதிய அணுகல் முறையினை நாங்கள் பரிந்துரை செய்திருந்தோம்.
அந்த பரிந்துரையின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தேர்தலில் களமிறங்க தீர்மானித்ததாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.