deepamnews
இலங்கை

இலங்கைக்கு கடத்துவதற்காக  வாகனத்தில் கொண்டு  சென்ற பல லட்சம் ரூபாய் பெறுமதியான   பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது

கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி  வைத்திருந்த பல லட்சம்  ரூபாய்    மதிப்பிலான பூச்சி கொல்லி மருந்துகள், அழகு சாதன பொருட்களை மெரைன் போலீசார் இன்று செவ்வாய்க்கிழமை(7) காலை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.மரைன் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் தேவிபட்டினம்  சார்பு ஆய்வாளர் அய்யனார் ஆகியோர் காவலர்கள் ரோந்து சென்றனர்.

கோப்பேரிமடம் சோதனை சாவடியில்   வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த 20 மூட்டைகளை  பிரித்து பார்த்தனர்.  

  450 கிலோ பூச்சி கொல்லி மருந்துகள்,  125 கிலோ அழகு சாதன பொருட்கள் கை கடிகாரம் பேன்ஸி பொருட்கள் இருந்தன.

அவற்றை எடுத்துச் செல்ல எவ்வித ஆவணங்கள் இல்லை. இது குறித்து வாகனத்தில் இருந்த 2 பேரிடம் நடத்திய  விசாரணையில்  முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இருவரையும் மரைன் காவல் நிலையம்  அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த பொருட்களை  கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ஏற்றி வந்தது தெரிந்தது .

அதை தொடர்ந்து பறிமுதல் செய்த பொருட்களை சரக்கு வாகனத்துடன் ராமநாதபுரத்தை சேர்ந்த   2 பேர் கைது செய்யப்பட்டதுடன்   சரக்கு வாகனம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் ராமநாதபுரம் சுங்கத்துறையினர் இடம், மரைன் போலீசார் ஒப்படைத்தனர்

Related posts

கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை..! – சஜித் தெரிவிப்பு

videodeepam

அத்தியாவசிய மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

videodeepam

அடுத்த வருடத்தில் பொதுத் தேர்தல் – மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சூழல் உருவாக்கப்படும் என்கிறார் ஜனாதிபதி ரணில்

videodeepam