deepamnews
இலங்கை

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈடு?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈட்டை வழங்குவது தொடர்பிலான, அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தால், இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக குளிர் காரணமாக, 1,800 இற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஏப்ரல் 5 பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

videodeepam

சணல் போ தொலைக்காட்சி ஆவணம் -கோழி பிடித்த கள்ளனும் கூட இருந்தே தேடுகின்றான் என்பது போல அமைகிறது. சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவிப்பு.

videodeepam

ஐக்கிய மக்கள் சக்தி தனிநபர் சொத்தல்ல – கட்சியில் இருந்து வெளியேறமாட்டேன் என்று பொன்சேகா தெரிவிப்பு.

videodeepam