deepamnews
இலங்கை

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேரின் சடலங்கள், வவுனியா குட்செட்வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து பொலிசாரால் இன்று மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

அதாவது, இன்றையதினம் குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்ப்படுத்தியுள்ளார். எனினும் அவர் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதன்போது குறித்த வீட்டினுள் குடும்பஸ்தர் அவரது சிறுவயதான இருபிள்ளைகள், மனைவி ஆகியோர் மர்மமான முறையில்  உயிரிழந்து கிடந்தமையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இச் சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் வயது42,  வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக  கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி வயது36, இருபிள்ளைகளான   மைத்ரா (வயது9)  கேசரா (வயது3) ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா பொலிசார் மீட்கப்பட்ட சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Related posts

வடக்கு – கிழக்கு மக்களின் ஆணையில் மாற்றமில்லை என்பதை இந்தத் தேர்தலும் உணர்த்த வேண்டும் – சுமந்திரன் தெரிவிப்பு

videodeepam

பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குவது அரச அதிகாரிகளின் பொறுப்பு – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

videodeepam

பண்டிகைக் காலங்களில் போலி ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரிப்பு

videodeepam