deepamnews
இலங்கை

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் கீழே வீழ்ந்து உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர் திடீரெனக் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், தலையாழி பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் தினேஷ் என்ற 44 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் மூச்செடுக்கச் சிரமம் என்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் வேறொரு விடுதிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டபோதே நேற்று மாலை வைத்தியசாலையின் பின்பக்க நுழைவாயில் ஊடாகத் திடீரென வெளியேறி சிறிது நேரத்தில் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

அதிகளவிலான மதுபான பாவனை காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்ட மேற்படி நபரின் உடலில் ஏற்றப்பட்ட கனூலா கழற்றப்பட்ட நிலையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஜனாதிபதி ரணிலுடன் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் சந்திப்பு

videodeepam

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

videodeepam

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் அகதிகளாக ராமேஸ்வரத்தில் தஞ்சம்.

videodeepam