deepamnews
இலங்கை

இலங்கையில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டம்

இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ரஷ்யாவின் திட்டங்களை சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
ரஷ்ய அரச அணுசக்தி கூட்டுத்தாபனமான Rosatom இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைக்க உதவும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்தத் திட்டம், நாட்டின் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது சர்வதேச அணுசக்தி நிறுவன நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, அணுமின் நிலையத்தை மிதக்க வைப்பதா அல்லது நிலத்தில் நிர்மாணிப்பதா? என்பது பற்றிய விவாதம் தற்போது இடம்பெற்று வருகிறது.

அணுமின் நிலையங்களில் பணிபுரியும் நிபுணர்களுக்கான பயிற்சிகளை ரஷ்யாவின், ரஷ்ய அரச அணுசக்தி கூட்டுத்தாபனமான Rosatom வழங்கும்.

இந்தநிலையில் இலங்கையில் நிலவும் எரிசக்தி பற்றாக்குறை பிரச்சினையை அணுசக்தியால் மட்டுமே தீர்க்க முடியும் என தூதுவர் குறிப்பிட்டார்.

அத்துடன் குறித்த அணு மின்சார நிலையத்தின் உற்பத்தி நிலையத்தின் திறன் 300 மெகாவோட்டாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts

யாழ்ப்பாணத்தில் திடீரென வந்த புத்தர் சிலை!

videodeepam

கஞ்சா விற்க முயன்ற இரண்டு பொலிசார் கைது.

videodeepam

பிறந்து 42 நாட்களே ஆன  குழந்தை பலி

videodeepam