deepamnews
இலங்கை

தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து 23 மெகாவாட் மின்சாரம் கொள்வனவு.

மின்சார நெருக்கடியை தீர்க்கும் வகையில் மாத்தறை ‘ஏஸ் பவர்’ தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் 23 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்திற்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்கும் நோக்கில் மாத்தறை ஏஸ் பவர் தனியார் நிறுவனத்திடமிருந்து அவசர கொடுக்கல் வாங்கலின் அடிப்படையில் மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக எம்பிலிபிட்டிய ஏஸ் பவர் தனியார் நிறுவனத்திடமிருந்தும் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மின்சார சபை கூறியுள்ளது.

Related posts

யாழ். பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்கள் தேசிய ரீதியில் சாதனை!

videodeepam

சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை துரிதப்படுத்தப்படும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு 

videodeepam

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின சுதந்திர தின நிகழ்வுக்கு 200 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பு

videodeepam