deepamnews
சர்வதேசம்

முன்னாள் ஜனாதிபதியை விடுவிக்கக்கோரி போராட்டம் – பெருவில் அவசர நிலை பிரகடனம்

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. இதனையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020ஆம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 ஜனாதிபதிகளைக் கண்டது.

இந்த நிலையில், பாடசாலை ஆசிரியராக வாழ்வை ஆரம்பித்து இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி பெரு நாட்டின் ஜனாதிபதியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் அவற்றை காஸ்டிலோ திட்டவட்டமாக மறுத்து வந்தார்.

சில தினங்களுக்கு முன் பெட்ரோ காஸ்டிலோ, பெரு நாட்டில் அவசர நிலையை அமுல்படுத்துவதாக அறிவித்தார். மேலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த அரசை ஏற்படுத்தப்போவதாகவும் அறிவித்தார்.

ஜனாதிபதியின் இந்த முடிவை எம்.பி.க்கள் நிராகரித்துள்ளனர். மேலும் பெட்ரோ காஸ்டிலோவுக்கு எதிராக அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவரது பதவியைப் பறிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக பெரும்பான்மையான எம்.பி.க்கள் வாக்களித்ததால் காஸ்டிலோ ஜனாதிபதி பதவியை இழந்தார். மேலும் கிளர்ச்சி மற்றும் சதித்திட்டம் தீட்டியதற்காக அடுத்த சில நிமிடங்களில் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக துணை ஜனாதிபதியாக இருந்த 60 வயதான பெண் தலைவர் டினா பொலுவார்டே ஜனாதிபதியாக பதவியேற்றார்.

Related posts

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை.

videodeepam

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் பலி

videodeepam

அமெரிக்க ஜனாதிபதி ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல்!

videodeepam