deepamnews
இந்தியா

இந்திய பொருளாதாரம்  அடுத்த ஆண்டு கடினமாக இருக்கும் –   ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவிப்பு

இந்தியா மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கு அடுத்த ஆண்டு கடினமானதாக இருக்கும்” என காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியிடம் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் விவரித்துள்ளார்.

 ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் புதன்கிழமை கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் சிறிது தூரம் நடந்து சென்றார். அவர் ராகுல் காந்தியுடன் உரையாடல் நடத்தினார். அப்போது இந்திய பொருளாதாரம் குறித்து இருவரும் உரையாடினர். இந்திய பொருளாதாரம் குறித்து ரகுராம் ராஜன் கூறுகையில் “முக்கியமான வட்டி விகிதங்களின் உயர்வு, ஏற்றுமதிகள் குறைந்து வரும் நிலையில். அடுத்த ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சியை எட்டுவதற்கு மிகவும் சிரமப்படும்.

அடுத்த ஆண்டில் நாம் 5 சதவீத வளர்ச்சியை அடைந்தால், அது நமது அதிர்ஷ்டம். வளர்ச்சியை எந்த மதிப்பீட்டில் அளவிடுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கடந்த ஆண்டு மோசமான காலாண்டை கொண்டிருந்தது. அதன் மதிப்பில் வளர்ச்சியைக் கணக்கிட்டால் இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாகவே தெரியும். குறிப்பாக,  பெருந்தொற்றுக்கு முன்னர் 2019-ஆம் ஆண்டையும் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்படியே அதனை தலைகீழாக 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டீர்கள் என்றால் வருடத்திற்கு 2 சதவீதம் வளர்ச்சியாக இருக்கும். ஆனால், அது நமக்கு மிகவும் குறைவு.

மந்தமான வளர்ச்சிக்குக் காரணம்,  பெருந்தொற்றும் ஒரு பகுதியாக இருக்கிறது. பெருந்தொற்று ஊரடங்கிற்கு முன்னர் இந்தியா மந்தமாக வளர்ந்து வந்தது. வளர்ச்சிக்குத் தேவையான சீர்திருத்தங்களைச் செய்ய நாம் தவறி விட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழகத்தில் தெலுங்கு திரைப்படங்களை வெளியிட அனுமதிக்கமாட்டோம் – சீமான் எதிர்ப்பு

videodeepam

பழனியில் அகற்றப்பட்ட முருகனில் வேலினை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் – சீமான் சீற்றம்

videodeepam

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

videodeepam