பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் நேற்று காலை ஏற்பட்ட விஷ வாயுக்கசிவு காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தொழிற்சாலையில் குளிரூட்டும் இயந்திரத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் வாயுக்கசிவு பரவியுள்ளது.
இந்த வாயுக்கசிவு விபத்தில் 11 தொழிலாளர்கள் பலியாகியுள்ளதுடன், அவர்களில் 2 சிறுவர்களும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய வாயு கசிவு 300 மீட்டர் சுற்றளவுக்கு பரவியுள்ளதனால் அப்பகுதி மக்கள் மூச்சு திணறல், கண் எரிச்சல், மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அப்பகுதிக்குள் யாரும் நுழைய வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதுடன், அப்பகுதி மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.