deepamnews
இலங்கை

வடக்கில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தல் – கெஹலிய ரம்புக்வெல தெரிவிப்பு

வடக்கில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தல் என்று ஊடகங்களில் வெளியான செய்திகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் சகல இன மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் சுதந்திரமாக நடமாட முடியும். அந்த நிலைமையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் வடக்கில் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் அச்சுறுத்தல் என ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் வியப்பை ஏற்படுத்துகின்றன.

என்ன பிரச்சினை நடந்தாலும் அதற்குத் தீர்வு வழங்க நீதிமன்றம் உண்டு.  அதைவிடுத்து எவரும் சட்டத்தைக் கையில் எடுக்க முடியாது.” – என்றார்.

Related posts

இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி –  உலக வங்கி தீர்மானம்

videodeepam

யாழில் மீற்றர் வட்டிக் கொடுமையால் உயிரை மாய்த்த வர்த்தகர்

videodeepam

தேசத்தை காத்த தந்தை ரணில்; பாலித ரங்கே தெரிவிப்பு

videodeepam