நாட்டில் குடும்பம் ஒன்றின் மாதாந்த செலவு 76 ஆயிரத்து 124 ரூபா வரை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய திட்டத்தின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டுக்கான தரவுகளின் படி இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பீடத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு குடும்பம் ஒன்றின் மாதாந்த செலவு 63,820 ரூபாவாக இருந்தது.
குறித்த அறிக்கைக்கு அமைய, குடும்பம் ஒன்று, மாதாந்த மொத்த செலவில் 53 சதவீதத்தை உணவுக்காக செலவிடுகிறது.
எஞ்சிய 47 சதவீதத்தை உணவில்லாத ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்காக செலவிடுகிறது.
இதன்படி, உணவுக்காக 40,632 ரூபாவும், எஞ்சிய தேவைகளுக்காக 35,492 ரூபாவும் செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது.
குறித்த உணவில்லாத எஞ்சிய செலவினங்களில் பெரும்பாலானவை பெறப்பட்ட கடனை செலுத்துவதற்காக பயன்படுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய திட்டத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.