deepamnews
இலங்கை

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கு பாதிப்பு ஏற்படாது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் ஊழியர் சேமலாப நிதியம்  உள்ளிட்ட மக்களின் பணத்தைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள நிதியங்களின் அங்கத்துவ இருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் செலுத்தப்பட்டுள்ள அதிக ஓய்வூதிய நிதி கொடுப்பனவு வீதங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் இலங்கையின் வங்கி கட்டமைப்பின் ஸ்திரத்தன்மைக்கோ, எந்தவொரு அரச அல்லது தனியார் வங்கியின் ஸ்திரத்தன்மைக்கோ பாதிப்பு ஏற்படாது என கம்பஹா மாவட்ட செயலகத்தின் நிர்வாகக் கட்டடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றிய போது ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 50 மில்லியனுக்கும் மேற்பட்ட வங்கி வைப்பீட்டாளர்களின் எந்தவொரு வைப்புகளுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது எனவும் வங்கி வைப்புகளுக்காக செலுத்தப்படுகின்ற வட்டிக்கும் பாதிப்பு ஏற்படாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.  

Related posts

ஊடகங்களில் வெளிவந்த செய்தி பொய் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

videodeepam

யாழில் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸாரால் பரபரப்பு!

videodeepam

கிளிநொச்சி பாடசாலையில் வன்முறைச் சம்பவம் – வெடித்தது போராட்டம்!

videodeepam