deepamnews
இலங்கை

இன்று முதல் மின்சாரக் கட்டணம் 14.2 சதவீதத்தால் குறைப்பு.

மின்சாரக் கட்டணத்தை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 14.2 சதவீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, வீட்டு மின் பானையில் பூச்சியம் முதல் 30 அலகு வரையிலான மாதாந்த நுகர்வு கொண்ட பிரிவுக்கு 65 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு அலகு 30 ரூபாவலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மாதாந்த நிலுவை கட்டணம் 400 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

60 அலகுகளுக்குக் குறைவான பிரிவில், ஒரு அலகுக்கான கட்டணம் ரூபா 42ல் இருந்து 32 ரூபாவாகவும், மாதாந்த நிலுவைக் கட்டணம் ரூபா 650 இல் இருந்து 300 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

91 மற்றும் 120 அலகு பிரிவுகளுக்கு, ஒரு அலகு 42 ரூபாவிலிருந்து 35 ரூபாயாகவும், மாதாந்த நிலுவைக் கட்டணம் 1500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Related posts

19 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் மின்னல் எச்சரிக்கை!

videodeepam

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: 25 சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!

videodeepam

பனைவளம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்  – சிவஞானம் சிறீதரன் தெரிவிப்பு

videodeepam