deepamnews
இலங்கை

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு – நிதி அமைச்சருக்கு அனுமதியளிக்கும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனை நேற்று நாடாளுமன்றில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனை தொடர்பிலான விவாதம் நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்றது.

இதன்போது, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனைக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதன்படி, இந்த யோசனையானது 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் உத்தர லங்கா சபாகய முதலான கட்சிகள் குறித்த யோசனைக்கு எதிராக வாக்களித்தன.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இந்த யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தார்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளும் எதிராக வாக்களித்திருந்தன.

Related posts

இலங்கையில் புதிய வகை நுளம்பு கண்டுபிடிப்பு

videodeepam

மருந்தாளர்கள் கடமைக்கு வராமை காரணமாக நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பு!

videodeepam

யாழில் அதிகாலை ஏற்பட்ட விபத்து – வீதியெங்கும் எரிபொருள்.

videodeepam