deepamnews
இலங்கை

நாட்டில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு:மேலும் 04 மரணங்கள் பதிவு,

இலங்கையில் மேலும் 4 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ள அதேவேளை, இந்த வருடத்துக்குள் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்று நோயியல் பிரிவின்படி, நேற்று வரை 49 ஆயிரத்து 559 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில் 10 ஆயிரத்து 879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் 24 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்படுள்ளனர்.

அத்துடன், ஜூன் மாதத்தில் 9 ஆயிரத்து 916 டெங்கு தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இது கடந்த ஜனவரி 2023 க்குப் பிறகு ஒரு மாதத்திற்குள் பதிவான அதிக எண்ணிக்கையாகும்.

இந்த நிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அகற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

videodeepam

இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்கும் சீனா – இந்திய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்க திட்டம்

videodeepam

காணாமல் போன 14 வயது சிறுமி வவுனியாவில் காதலனுடன் மீட்பு!

videodeepam