deepamnews
இலங்கை

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நான்கு வருடங்களுக்கு நீடிப்பு – ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு.

இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படும் ஜி.எஸ்..பி. பிளஸ் வரிச்சலுகையை 2027 ஆம் ஆண்டு டிசம்பர்  31 ஆம் திகதி வரை 4 வருட காலத்திற்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம்  தீர்மானித்துள்ளது.

இந்த வரிச்சலுகை இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதி நிறைவடையவிருந்தது.

புதிய  ஜி.எஸ்..பி. பிளஸ்  வரிச்சலுகை தொடர்பான கலந்துரையாடல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இலங்கை போன்ற நாடுகள் முன்னுரிமை தீர்வை வரி சலுகைகளை இழக்காது என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதித்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,  2022 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை 3.2 பில்லியன் யூரோ பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதித்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

வவுனியா மாவட்டத்தில் கலைப் பிரிவில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி முதலிடம்.

videodeepam

அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐவர் கைது.

videodeepam

விமானம் தாமதமானதால் வெளிநாட்டில் வேலையை இழந்த இலங்கை இளைஞர்கள்

videodeepam