deepamnews
இலங்கை

இந்திய பிரதமருடன் ஜீவன் தொண்டமான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மலையக மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்திய பிரதமருடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், மலையக மக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் தொடர்பில் இந்தியத் தரப்பினருக்கு எடுத்துரைக்கவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் அரச அங்கீகாரத்துடன் தேசிய மட்ட நிகழ்வு எதிர்வரும் நவம்பரில் நடத்தப்படவுள்ளது.

Related posts

இன்று முதல் அரச ஊழியர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை

videodeepam

மன்னாரில் அரச காணியில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்

videodeepam

கிளிநொச்சி செல்வாநகர் புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்ப்பு!

videodeepam