எதிர்வரும் செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்படவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மீளாய்விற்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க முடியுமென அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்கான நாடாளுமன்ற செயற்பாடுகளில் 80 வீதமானவை தற்போது நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பந்தயம் மற்றும் சூதாட்ட வரியை மறுசீரமைப்பதற்கான நடைமுறைகளை அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
எவ்வாறாயினும், திருத்தப்பட்ட பந்தயம் மற்றும் சூதாட்ட வரி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.