தேசிய எரிபொருள் அனுமதி அல்லது QR குறித்த குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கையில் மாதாந்த எரிபொருள் பாவனை 50 சத வீதத்தால் குறைக்கப்பட்டதாகவும் இதனால் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்க டொலர் நெருக்கடியில் நாடு இருந்தபோது, QR குறியீட்டை அறிமுகப்படுத்தியதன் பலன் காரணமாக மற்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கு டொலர்களைப் பயன்படுத்த முடிந்ததாகக் கூறும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்,
QR அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு 65 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறது.