இயந்திரக்கோளாறு காரணமாக மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ளது.
இதனால் தேசிய மின் கட்டமைப்பிற்கு கிடைக்க வேண்டிய 270 மெகாவாட் மின்சாரம் இழக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் பிறப்பாக்கியை வழமைக்கு கொண்டு வருவதற்கு சுமார் 10 நாட்கள் செல்லுமெனவும் சபை கூறியுள்ளது.
இதனிடையே, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மற்றுமொரு மின் பிறப்பாக்கியும் தற்போது பயன்பாட்டில் இல்லை.
பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக மின் பிறப்பாக்கி செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக, தற்போது நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஒரேயொரு மின்பிறப்பாக்கி மாத்திரமே செயற்படுகின்றது. இதனூடான தேசியக் கட்டமைப்பிற்கு 300 மெகாவாட் மின்சாரம் இணைக்கப்படுகின்றது.
இதனிடையே, நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான மின் விநியோகத்தை முன்னெடுப்பதை இலங்கை மின்சார சபை உறுதிப்படுத்தியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவினூடாக அவர் இதனை கூறியுள்ளார்.
எந்த வகையிலும் மின் விநியோகத்தை துண்டிப்பதற்கு திட்டமில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியான மின் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு தேவையான மேலதிக மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மின்சார சபை செயற்படுவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.