deepamnews
இலங்கை

 ஒல்லித் தேங்காய் குவியலுக்குள் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட தேக்கம் குற்றிகள் மீட்பு!

ஒல்லித் தேங்காய் குவியலுக்குள்  மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட தேக்கம் குற்றிகள் மீட்பு!

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மகேந்திரா வானத்தினுள் சூட்சும்மாக மறைத்து கடத்தப்பட்ட தேக்க மரக் குற்றிகளை யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸார்  மீட்டுள்ளனர்.

சாவகச்சேரி நகர் பகுதியில் வைத்து இன்று பிற்பகல் 2:30 மணியளவில் தேக்கம் குற்றிகள் மீட்க்கப்பட்டதாக  சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

ஒல்லித் தேங்காய் குவியலுக்குள் மறைத்து கொண்டு சென்ற வேளையிலேயே மரக் குற்றிகள் மீட்க்கப்பட்டுள்ளன.

இதன்போது சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

3 இலட்சம் பெறுமதியான 13 தேக்க மர க்குட்டிகளே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவைச் சேர்ந்த 33வயதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

videodeepam

அனுமதிப்பத்திரம் இல்லாமல் மரக்குற்றிகளை கொண்டு சென்றவர் கைது

videodeepam

யாழில். பொதுமக்கள் மத்தியில் இடையூறு – வன்முறையுடன் செயற்பட்டால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

videodeepam