deepamnews
இலங்கை

சண்டிலிப்பாயில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது!

மானிப்பாய் – சண்டிலிப்பாயில் வீடொன்றுக்குள் புகுந்து மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு கொளுத்திய வன்முறைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டடிலில், 

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு தெ.மேனன் தலைமையிலான குழுவினரால் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

23,24 வயதையுடைய மானிப்பாயைச் சேர்ந்த சந்தேகநபர்களை கைதுசெய்ததுடன் வன்முறைச் சம்பவத்துக்கு பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள் இரண்டு வாள்கள், இரும்புக் கம்பி ஒன்று என்பனவற்றையும் மீட்டுள்ளனர்.

ஏற்கனவே இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் பழிவாங்கும் நோக்கிலேயே இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள்  இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

அத்துடன் மேலும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட 6 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றத்தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

இலங்கைக்கான கடன் சலுகைக்காலத்தை நீடித்தது இந்தியா:  ஒரு வருட அவகாசம் வழங்கியது

videodeepam

ஒன்றரை ரில்லியன் வரி வருமானத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் உத்தேசிப்பு –  அநுரகுமார குற்றச்சாட்டு

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தல் கண்காணிப்பிற்கு 4 அமைப்புகளுக்கு அனுமதி – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

videodeepam