deepamnews
இலங்கை

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிளின் பின்னே அமர்ந்திருந்து பயணித்த குடும்பப் பெண்ணொருவர் கீழே விழுந்து இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 25ஆம் திகதி குறித்த பெண், புதுக்குடியிருப்பில் இருந்து தேவிபுரத்தில் உள்ள வீட்டிற்கு, தனது மச்சானுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தார்.

இதன்போது வீதியில் சென்ற முச்சக்கர வண்டியை முந்துவதற்கு முயற்சித்தவேளை, மோட்டார் சைக்கிளின் கைபிடி முச்சக்கர வண்டியில் தட்டுப்பட்டது. இதன்போது அவர்கள் இருவரும் கீழே விழுந்தபோது குறித்த பெண் சம்பவ இடத்தில் மயக்கமுற்றார்.

அதன்பின்னர் அந்த பெண் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, இறுதியாக 25ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம்  (28) அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். சுஜீவன் வசந்தமலர் (வயது 28) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே குறித்த விபத்தில் உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் கடமையேற்பு

videodeepam

அறுவடை செய்த பூசணிக்காயை விற்பனை செய்ய முடியாத நிலை  – விவசாயிகள் கவலை

videodeepam

பட்டினி மையங்களாக உள்ள 48 நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் உள்ளடக்கியது உலக உணவுத் திட்டம்

videodeepam