கிளிநொச்சி மாவட்டத்தின் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி கனக ரஞ்சிதம் அவர்கள் இன்றைய தினம் 11.09.2023 கிளாநொச்சியில் ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இருந்தார் இதன் போது கடந்த 12 ,13 ஆண்டுகளாக வீதி ஓரங்களிலும் மர நிழல்களிலும் தமது உறவுகளுக்காக நீதி கோரி போராடிவரும் நிலையில் கடந்த 36 ஆவது ஜெனிவாவின் கூட்டத்தொடரில் இருந்து மனித உரிமையை பேணுகின்ற நாடுகளில் எடுத்துக் கூறி வரும் நிலையில் இதுவரையில் எந்தவித நீதியும் கிடைக்கப்பெறவில்லை.
தற்பொழுது 56வது ஜெனிவா கூட்டத்தொடர் இன்று நடைபெற்றுவரும் நிலையில் இந்தக் கூட்டத்தொடரிலாவது தமக்கான உரிய தீர்வினை ஜெனிவா பெற்றுத் தர வேண்டும் எனவும் தற்பொழுது நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்து வரும் நிலையில்
கொடூர யுத்தத்தின் மூலம் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கும் நீதியைப் பெற்றுத் தர வேண்டும் தமது உறவுகளை தொலைத்த மக்களுக்கு சர்வதேச நாடுகள் ஒன்று கூடி நடைபெறுகின்ற சர்வதேச ஜெனிவா கூட்டத் தொடரில் அவர்களுக்கான தீர்வினையும் பெற்றுத் தரவேண்டும் இதன் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் முகமூடியை கிழித்து மனித உரிமை மீறப்பட்டவர்களுக்கு தண்டனைவழங்கவேண்டும் எனவும் தற்பொழுது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அலையும் அனைவர்களும் வயது முதிர்ந்து தற்பொழுது முடியாத நிலையில் வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் நோய் வாய் தாக்கத்தில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உரிய திரு வினை பெற்று தர வேண்டுமென ஜெனிவா கூட்டத் தொடரினை வலியுறுத்தி வருகின்றனர்