deepamnews
இலங்கை

பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் சம்பியனாகியது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக அணி.

அரச அதிபர் வெற்றி கிண்ண வலை பந்தாட்ட  போட்டியானது (23) பலம்பொருந்திய திணைக்கள அணிகளின் பங்குற்றலுடன் சிறப்புற நடைபெற்று நிறைவடைந்தது.

இப்போட்டியில் கரைச்சிப்பிரதேச செயலக அணி,தெற்கு வலய கல்வித்திணைக்கள அணி,பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக அணி,கமநல அபிவிருத்தித்திணைக்கள அணி,விவசாய விரிவாக்க திணைக்கள அணி,பூநகரி பிரதேச செயலக அணி,மாவட்டச்செயலக அணி ஆகியன பங்குபற்றியிருந்தன.

சிறப்பாக இடம்பெற்ற இப்போட்டியின் 

இறுதி போட்டியில் மாவட்ட செயலக அணியினை எதிர்த்து பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக அணி விளையாடியிருந்தது.

இவ்விறுதிப்போட்டியில்  சிறப்பான தமது ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெற்றி கிண்ணத்தினை பச்சிலைபள்ளி பிரதேச செயலக அணி பெற்றுக்கொள்ள  2ம் நிலை  வெற்றி கிண்ணத்தினை மாவட்ட செயலக அணி பெற்றுக்கொண்டது.

கிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறுகின்ற நடப்பாண்டுக்கான இப் போட்டித்தொடரில் மாவட்ட செயலக, பிரதேச செயலக அணிகள் மற்றும் ஏனைய திணைக்கள அணிகள் உள்ளடங்கலாக 19 அணிகள் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றன.

அரச அதிபர் வெற்றிக்கிண்ண  போட்டி தொடரினூடாக உத்தியோகத்தர்களின் திறமைகளை இனங்காணல், உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தல் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களிடையே பரஸ்பர தொடர்புகளை உருவாக்குதல் போன்ற நோக்கங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டி நிகழ்வில் மாவட்டச்செயலகம்,பிரதேச செயலகங்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக கிளைத்தலைவர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் விளையாட்டு பிரிவின் உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள்,போட்டியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்

Related posts

அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை

videodeepam

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பாராட்டு.

videodeepam

யாழ் நோக்கி சென்ற அரச பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து.

videodeepam