deepamnews
இலங்கை

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர் சுற்றிவளைப்பில் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

திருகோணமலையில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கிண்ணியா கச்சக்கொடித்தீவு பகுதியில் உள்ள கடை ஒன்றில் விலை பட்டியல் காட்சிப்படுதாமல் விற்பனைக்காக ன பதுக்கி வைத்த 50 கிலோக்கிராம் கீரிச்சம்பா அரிசி கைப்பற்றப்பட்டது. குறித்த சுற்றிவளைப்பானது நேற்று (25) இடம்பெற்றுள்ளது. 

மேலும், திருகோணமலை நகரில் விலைப்பட்டியலின்றி விற்பனை செய்த மூன்று கடை உரிமையாளர்கள் உட்பட, திருகோணமலை பொது வைத்தியசிலையின் முன்னால் உள்ள கடையில் மென்பானம் போத்தலில் குறிக்கப்பட்ட விலைக்கு மேலதிகமாக விற்பனை செய்த ஒருவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அவர்களை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மேலும் தெரிவித்தனர்

Related posts

தாங்கள் நினைத்தபடி கடமைக்கு செல்லும் மாநகர உத்தியோத்தர் – கண்டுகொள்ளாத நிர்வாகம்

videodeepam

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு

videodeepam

இலங்கைக்கு செல்லமாட்டோம் என வியட்நாமிலுள்ள இலங்கை அகதிகள் தெரிவிப்பு – இருவர் தற்கொலைக்கு முயற்சி

videodeepam