deepamnews
இலங்கை

பொலிஸாரின் ஆதரவுடன் யாழ் மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வா ?? – சந்தேகம் கொள்ளும் பிரதேசவாதிகள் !

வடமராட்சி மருதங்கேணியில்
நீண்ட காலமாக இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு நாகர்கோவில் பகுதியில் பொலிஸ் காவலரணொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இன்று வரை குறித்த பகுதியில் பொலிஸ்காவலரண் அமைக்கப்படவில்லை.

இதனால் பொலிஸாரின் ஆதரவுடன் தான் இந்த சட்ட விரோத மண் அகழ்வு நடக்கின்றதோ என சந்தேகப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்ற போதே
மருதங்கேணி பிரதேச செயலாளரால் இது குறித்து தெரிவித்தார்

நீண்ட காலமாக குறித்த பகுதியில் சட்டவிரோதமான மணல் அகழ்வு இடம்பெற்று வரும் நிலையில் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குடத்தனை நாகர்கோயில்,மணற்காடு பகுதிகளில் சட்டவிரோதமான மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெறுவதுடன் குடத்தனை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் பொலிஸ் காவலரண் அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை குறித்த கோரிக்கைக்கு அமைவாக பொலிசார் செயற்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் கூட்டத்தில் கருத்து தெரிவித்த குறித்த பகுதியை சேர்ந்த பொதுமகன், இரவு பகலாக தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.

கூட்டங்களில் மாத்திரம் இந்த விடயம் பேசப்படுகிறதே தவிர எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவும் இல்லை என விசனம் தெரிவித்தனர்.

Related posts

திறைசேரியின் வருமானத்தை விட செலவு அதிகம் என்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன

videodeepam

அரசாங்கம் நாடுகளுக்கு காணி வழங்குவதில்லை முதலீட்டாளர்களுக்கே காணி – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

videodeepam

கிளிநொச்சியில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு!

videodeepam