deepamnews
இலங்கை

கடல் அட்டைகளை பிடித்தவர்கள் கடற்படையால் கைது!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக அட்டைகளை பிடித்த மூவர் வெற்றிலைக்கேணி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் மன்னாரை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடமைகளுடன் மூவரும் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இரவு நேரத்தில் பல படகுகள் சட்டவிரோதமாக அட்டை பிடிப்பதாக கடற்படையினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆயினும் பல படகுகள் தடைசெய்யப்பட்ட அட்டை தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

2023 ஆம் ஆண்டு புதிய வருட பிறப்பு இன்று – மக்கள் வான வேடிக்கைகளுடன் வரவேற்பு

videodeepam

பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்கப்படுவதை தடுப்பதற்கு கடும் சட்டங்கள் – ஜனாதிபதி நடவடிக்கை

videodeepam

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய சொத்தாவார் – வஜிர அபேவர்தன பாராட்டு

videodeepam