deepamnews
இலங்கை

கடும் வறட்சி. ஜம்போ கச்சான் விளைச்சலில் வீழ்ச்சி.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நாதன் குடியிருப்பு, பிறமந்தனாறு உழவனூர் ஆகிய பகுதிகளில் ஜம்போ கச்சான் செய்கைக்கு சிறந்த இடம் என தெரிவு செய்யப்பட்டு கடந்த வருடம் ஜம்போ கச்சான் செய்கையில் பாரியளவு விளைச்சலை பெற்றிருந்தது.

இவ்வருடம் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக ஜம்போ கச்சான் அறுவடையில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் இதன் காரணமாக சில விவசாயிகள் ஜம்போ கச்சான் அறுவடை செய்யாது கைவிட்ட நிலையில் காணப்படுவதாகவும்தெரிவிக்கின்றனர்.

ஜம்போ கச்சான் தற்பொழுது நான்கு மாதம் கடந்த நிலையில் அறுவடை செய்ய முடியாத நிலையில் கச்சானின் விளைச்சலும் பாரிய வீழ்ச்சியாக காணப்படுவதாகவும் பல லட்சம் ரூபாய் செலவழித்து ஜம்போ கச்சான் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் ஒருகிலோ கச்சானை கூட இவ்வருடம் விற்பனை செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட எமக்கு நட்டையீட்டினை பெற்று தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : மரணம் வரை செல்லும் அபாயம்!

videodeepam

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

videodeepam

நாளை (23) முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வகுப்புகளுக்கு தடை

videodeepam