deepamnews
இலங்கை

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் ஏற்று நீர்ப்பாசன திட்டம் சூரிய மின்கலத்தின் மூலம் செயற்படும் நடவடிக்கை  இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஸ்கந்தபுரம் ஏற்று நீர்ப்பாசன கமக்காரர் அமைப்பின் தலைவர் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர் றுபாவதி கேதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.குறித்த நிகழ்வில் மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.சுதாகரன்,பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் ,மாவட்ட மின் அத்தியட்சகர் ,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த திட்டத்திற்கான நிதியை நெதர்லாந்து சிக்கன கடனுதவி கூட்டுறவு அமைப்பு ஏற்று நீர்ப்பாசன அமைப்புக்கு வழங்கியிருந்தது. 38.3 மில்லியன் ரூபா செலவாகியிருந்தது.

அக்கராஜன் குளத்திலிருந்து நீர் ஏற்று நீர்ப்பாசனமாக ஸ்கந்தபுரம் பகுதிக்கு செல்கிறது .183 விவசாயிகள் பயனடையவுள்ளனர்.உப உணவு பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியும் .

2010ம் ஆண்டு குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதும் எரிபொருள் மூலம் இயந்திரந்திரம் இயங்கியது. இது விவசாயிகளுக்கு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தி குறித்த திட்டம் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி விசேட அறிக்கை

videodeepam

சங்கமித்தை வரவுமில்லை அரச மரம் நடவுமில்லை – வெடித்தது சங்கானையில் போராட்டம்!

videodeepam

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோருக்குக்கான பிரச்சினைகளை தெளிவுப்படுத்த வேண்டும் என்கிறார் அமைச்சர் அலி சப்ரி

videodeepam