deepamnews
இலங்கை

பொலிஸார் செயற்படவில்லை  என்றால் யாரிடம் கேட்பது –  சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி.

மட்டக்களப்பு மயிலத்தவனை – மாதவனை மேய்யச்சல் தரை விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ள போதும், இன்னும் அதன்படி பொலிஸார் செயற்படவில்லை என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நாட்டில் பொலிஸ்மா அதிபர் இல்லாத நிலையில், யாரிடம் இது தொடர்பில் கேட்பது என்ற கேள்விகள் நிலவுகின்றது என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று  ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்தே சாணக்கியன் இராசமாணிக்கம் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் ஜனாதிபதி தற்போது நாட்டில் இல்லை. நாட்டின் பொலிஸூக்கு பொறுப்பான அமைச்சரும் நாட்டில் இல்லை. அத்துடன் பொலிஸ்மா அதிபரின் நியமனமும் சட்டவிரோதமானது, அதற்கு அரசியலமைப்பு பேரவையின் அனுமதி கிடைக்கவில்லை என்று ஒரு தரப்பு கூறுகின்றது. இதேவேளை ஜனாதிபதி வெளிநாடு செல்லும் போது நியமிக்கப்படுபவர்களை அரசியலமைப்பு பேரவையால் நீக்க முடியாது என்று இன்னுமொரு தரப்பு கூறுகின்றது.

இதேவேளை ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி கூட்டமொன்றை நடத்தி கூறிவற்றை இன்று வரையில் பொலிஸாரால் மட்டக்களப்பில் செயற்படுத்தவில்லை. பொலிஸ்மா அதிபர் இல்லாத நேரத்தில் நாங்கள் பிரச்சினைகளை யாரிடம் கூறுவது என்று வினவினார்.

Related posts

இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

videodeepam

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

videodeepam

இலங்கை மத்திய வங்கியில் மாயமான பணம் குறித்து வெளியான தகவல்

videodeepam