அமெரிக்காவின் லெவிஸ்டனில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 22 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட நபர் இன்னமும் அந்த பகுதியில் காணப்படுகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பல இடங்களில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்துள்ள பொலிஸார் சந்தேகநபரின் படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதிக்கு இந்த சம்பவம் குறித்து உடனடியாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் 50 பேர் வரை காயமடைந்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லெவிஸ்டனில் நபர் ஒருவர் தொடர்ந்து துப்பாக்கிதாக்குதலில் ஈடுபட்டுள்ளார் மக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கதவுகளை மூடிவிட்டு வீடுகளிற்குள் இருக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாரிய துப்பாக்கி சூட்டு சம்பவம் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என தெரிவித்துள்ள மருத்துவமனை வட்டாரங்கள் பல இடங்களில் மக்களிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளன.