கிளிநொச்சி ஏ-35 வீதியின் அதிக பாடசாலை மாணவர்கள் கடக்கும் பாடசாலை நேரத்தில்; தொடர்சியாக டிப்பர் வாகனங்களை போலீசார் வழி மறித்து மாணவர்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து வருவதுடன் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலையும் கானப்படுகின்றது.
கிளிநொச்சி முரசுமோட்டை ஏ-35 வீதியின் அருகருகே அமைந்துள்ள முருகானந்தா கல்லூரி மற்றும் முருகானந்தா ஆரம்ப வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளிலும் சுமார் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தினமும் காலை 7:00 மணி முதல் 7.30 மணி வரையான பாடசாலை நேரங்களில் பாடசாலை வீதி பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்ற போலீசார் குறித்த இரு பாடசாலைகளுக்கு இடையிலும் பாடசாலைகளுக்கு முன்பாகவும் ஏ-35 வீதியால்; வரும் டிப்பர் வாகனங்களை தொடராக வழி மறித்து மாணவர்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதுடன் எதிரே வாகனங்களாலும் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை காணப்படுகிறது.
டிப்பர் வாகனங்களின் வழியனுமதிப்பத்திரங்களை பரிசோதிப்பதற்காக ஏ -35 வீதி பரந்தன் மற்றும் ஏ-09 வீதி ஆனையிறவு ஏ -32 வீதி பூநகரி சங்குப் பிட்டி ஆகிய பகுதிகளில் பொலிஸ் சோதனை சாவடிகள் இருக்கின்ற போதும் குறித்த இரண்டு பாடசாலைகளுக்கு அருகிலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் இந்த டிப்பர் வாகனங்களை பாடசாலைகளுக்கு முன்னால் வழி மறிப்பதன் காரணமாக விபத்துக்கள் ஏற்படும் ஆபத்து நிலை காணப்படுவதுடன் மாணவர்களின் போக்குவரத்துகளிலும் பொலிசார் தொடர்ச்சியாக இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இன்றைய தினமும் காலை குறித்த பாடசாலைகளுக்கு முன்னால் 10 இற்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்களை மறித்து இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.