deepamnews
இலங்கை

வெதுப்பகத்தினுள் நுழைந்து ஊழியரை சரமாரியாக தாக்கிய மர்ம கும்பல்.

ஹட்டன், கொட்டகலை, புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றிற்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கு பணியாற்றிய ஊழியர்கள் இருவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, வெதுப்பகத்திற்கு சொந்தமான இரண்டு லொறிகள் மீதும் கும்பல் தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்துள்ளதாக திம்புல பத்தனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பத்து பேர் கொண்ட குழுவொன்று ஆயுதங்களுடன் வந்ததாகவும், அதன் பின்னர் ஊழியர்கள் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தாக்குதலை நடத்திவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை திம்புல பத்தனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதலை நடத்திய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை, வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என வெதுப்பக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது தனது பொறுப்பு என்கிறார் ஜனாதிபதி ரணில்

videodeepam

பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தும் செயற்பாட்டில் ஜனாதிபதி – விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு

videodeepam

நெய்யில் கலப்படம் – பரிசோதனை செய்ய அமைச்சு தீர்மானம்

videodeepam