deepamnews
இலங்கை

தர்மத்தை போதிக்க வேண்டிய சிலரின் தகாத செயலும் வார்த்தைகளும் வேதனை தருகிறது -அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு.

தர்மத்தை போதிக்க வேண்டிய சிலரின் இழிவான வார்த்தைகளும் செயற்பாடுகளும் வேதனையளிப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட விகாராதிபதி அம்பேபிட்டிய சுமன தேரரின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பாக நேற்று(27.10.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“துரதிஷ்டவசமாக இந்த நாட்டிலே இவ்வாறான பிரகிருதிகள் அனைத்து தரப்பிலும் இருக்கின்றனர் என்பது வேதனைமிகு யாதார்த்தமாக விளங்குகின்றது.

இந்த நாடு இன்றளவும் மீளமுடியாமல் தவிப்பதற்கு பிரதான காரணமான கடந்த கால யுத்தம் தோன்றுவதற்கு இரண்டு தரப்பிலும் இருந்த இவ்வாறான பிரகிருதிகளின் கருத்துக்களும் செயற்பாடுகளுமே காரணம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

அதேபோன்று உலகிற்கு சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்க வேண்டியவர்களின் இவ்வாறான இழிவான செயற்பாடுகள் தொடர்பில் மரியாதைக்குரிய பௌத்த பீடங்கள் அக்கறை செலுத்த வேண்டும். இந்த நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும்.

காவி உடை கவசமாக பயன்படுத்தப்படுவதை சட்டத்தை பாதுகாக்க வேண்டிய தரப்புக்கள் அனுமதிக்க கூடாது. மதகுரு என்று சொல்லப்படுகின்ற குறித்த நபரின் செயற்பாடுகள் மற்றும் பின்னணிகள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன.

இவை அனைத்தும் விரிவாக ஆராய்ந்து விஷக் கிருமிகள் அனைத்தும் களைக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

இதுதொடர்பாக, எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளதுடன் அமைச்சரவையிலும் பிரஸ்தாபிப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

யாதார்த்தத்தினை புரிந்து கொண்டு ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையிலான எமது அரசாங்கம் விரைவில் இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ” என தெரிவித்துள்ளார்.

Related posts

எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

videodeepam

உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம், இஸ்ரேஸ் 5 ஆம் இடத்தில்.

videodeepam

இல்லாத கூட்டமைப்பிற்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும் – இரா.சம்பந்தனிடம் கே.வி. தவிராசா கேள்வி

videodeepam