போக்குவரத்து கொடுப்பனவை அதிகரித்தல் ,ஏனைய சலுகைகளை வழங்குதல் ,மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கான பரீட்சையை நடாத்துதல், உதவி பிராந்திய வைத்திய அதிகாரிகள் தங்களுக்கு கட்டளை வழங்குவதை தடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பூநகரி, கண்டாவளை, பளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளின் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.குறித்த பணிப்புறக்கணிப்பை இன்றும் நாளையும் முன்னெடுக்கவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.