deepamnews
இலங்கை

சுமனரத்தன தேரர் தாயின் கல்லறை உடைக்கப்பட்டதா? – அழைத்து கேட்குமாறு பிள்ளையானுக்கு மனோ ஆலோசனை.

தனது தாயின் கல்லறை உடைக்கப்பட்டதாக, பகிரங்கமாக இனவாத, வன்முறை கருத்துகளை கூறி, மட்டு மாநகரசபை ஆணையாளர் மீது சுமனரத்தன தேரர்,  குற்றம் சாட்டி உள்ளார். ஆகையால்,   மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்துக்கு, அம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு அதிகாரபூர்வமாக,  அழைப்பு விடுத்து, அவரது தரப்பையும் கேட்டு, அதில் ஏதும் உண்மை உள்ளதா, இல்லையா என்ற விபரங்களை முழு நாட்டுக்கும் தெரியப்படுத்துங்கள் என   பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தவிசாளர், இராஜாங்க அமைச்சர்  பிள்ளையான் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் தான் நேரடியாக உரையாடியுள்ளேன் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பல்லாண்டுகளாக மேலாக பொது வெளியில் இனவாத கருத்துகளை கூறியும், வன்முறைளில் ஈடுபட்டும் வரும் அம்பிட்டிய சுமனரத்தன தேரர் மீது ஐசிசிபிஆர் என்ற சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டம்  இன்னமும் பாயவில்லை.  

இச்சட்டத்திலிருந்து இவருக்கு இனிமேல் விலக்கு வழங்க முடியாது.  இனி  இது முடிவுக்கு வர வேண்டும். இவரது பாரதூரமான இனவாத கருத்துகளுக்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் மூலம் நடவடிக்கை எடுப்பார் என நான் நம்புகிறேன்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் என்னிடம் உரையாடி உள்ளார். அதேபோல், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. சிறிகாந்தாவுடன் நான் உரையாடினேன். தனது தாயின் கல்லறை உடைக்கப்பட்டதாக, தேரர் பகிரங்கமாக கூறியுள்ளமை தொடர்பாக  உண்மையை கண்டறியுமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளேன். இதுவே முறைப்படி செய்யப்பட வேண்டிய காரியம் என நினைக்கிறேன்.    

Related posts

மருந்துகளுக்கு தட்டுப்பாடு – அத்தியாவசிய மருந்து வகைகளின் பட்டியல் புதுப்பிப்பு.

videodeepam

வீதி விபத்தில் போலீஸ் உத்தியோகத்தர் மற்றும் முதியவர் பலி!

videodeepam

புதிய அரசே எமது நாட்டுக்குத் தேவைப்படுகின்றது – லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு

videodeepam