deepamnews
இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு.

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(07.11.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளது.

கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இது திடீர் அதிகரிப்பாகும்.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (07.11.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 331.96 ரூபாவாகவும், கொள்வனவு விலை 321.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.83 ரூபாவாகவும், கொள்வனவு விலை 233.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 357.65 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 342.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 411.32 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 395.57 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Related posts

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிகரான அரசியல் தலைமைத்துவம் நாட்டில் இல்லை – பொதுஜன பெரமுன தெரிவிப்பு

videodeepam

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி பதவி விலகியமை குறித்து ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கருத்து !

videodeepam

கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிகளவிலான நிதியை ஒதுக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

videodeepam