deepamnews
இலங்கை

வேகமாக சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கி சூடு.

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய மைதானத்திற்கு அருகில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு பொலிஸார் சைகை செய்த போது, பொலிஸ் ஜீப் மீது ​​முச்சக்கரவண்டி மோதிவிட்டு தப்பி சென்றுள்ளது.

இதனால் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள நிலையில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டியை நிறுத்துவதற்காக நடமாடும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவின் அதிகாரி ஒருவரே துப்பாக்கியால் சுட்டதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் போது முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் அதனை கைவிட்டு ஓடியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொரு தொகுதி முட்டைகள் நாட்டிற்கு வருகை

videodeepam

மின்சாரக் கட்டணத்தை 27 வீதத்தால் குறைக்கும் சாத்தியம் உள்ளது  – ஜனக்க ரத்நாயக்க தெரிவிப்பு

videodeepam

வாள் வெட்க்கிலக்காகி ஒருவர் பலி மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

videodeepam